Western Ghats Spatial Decision Support System [WGSDSS]
Ecologically Sensitive Regions in the Western Ghats
T V Ramachandra, Bharath Setturu, Vinay S, MD Subash Chandran, Bharath H. Aithal
Energy and Wetlands Research Group (EWRG), Environment Information System (ENVIS),
Center for Ecological Sciences (CES), Indian Institute of Science (IISc),
Tel: 080-22933099 / 22933503 / 23608661
Email: tvr@iisc.ac.in, envis.ces@iisc.ac.in

மேற்குத் தொடர்ச்சி மலையின் இடஞ்சார்ந்த முடிவெடுக்கும் கட்டமைப்பு- விவரங்கள்

சிறப்பம்சங்கள்:

• சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் கொண்ட பகுதிகளைக் காட்சிபடுத்த உதவும்.
• சுற்றுச்சூழல் உணர்திறனைக் கணக்கிடுவதற்குப் பயன்படுத்தப்படும் காரணிகளை அறிந்து கொள்ள முடியும்.
• கட்டம் அளவிலும் (5'x 5' அல்லது 9 கி.மீ x 9 கி.மீ) கிராம அளவிலும் தகவல்கள் கிடைக்கும்.
• கீழ்நிலை மட்டங்களிலும் (BMC, உள்ளூர் வனத்துறை முதலியன) முடிவுகள் எடுக்கத் துணையாக இருக்கும்.

மேற்குத் தொடர்ச்சி மலையின் இடஞ்சார்ந்த முடிவெடுக்கும் கட்டமைப்பு (WGSDSS) அங்கு நடைப்பெற்றுவரும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தகவல் மற்றும் பொதுவாயில் வலைத் தொழில்நுட்பங்களின் சமீபத்திய முன்னேற்றங்களை, இடம்சார்ந்த நுட்பங்களைக் (உயிர், புவி, காலநிலை, சூழலியல், சுற்றுச்சூழல் மற்றும் சமூக காரணிகள்) கொண்டு ஒருங்கிணைக்கப்பட்டு, பிரிக்கப்பட்ட நிலைகளில் பயன்படுத்தப்படுகிறது. இது சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வேளையில், நிர்வாக வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துகிறது. மேலும் இது சூழல்சார் மற்றும் நீரியல்சார் ரீதியாக முக்கியமான சயாத்ரி மலைத் தொடர்களின் சமூக அக்கறையுள்ள மேலாண்மைக்கு உதவுகிறது. தகவல்களின் தொகுப்பு மற்றும் ஒருங்கிணைப்பு மூலம், பிரிக்கப்பட்ட மட்டங்களில், (கிராமங்கள், கட்டங்கள்) சுற்றுச்சூழல் ரீதியான உணர்திறன் கொண்ட பகுதிகளைக் காட்சிப்படுத்துதலின் மூலம், தற்போதைய நிலையைப் புரிந்துக் கொள்ள உதவும். இவை கீழ்நிலை மட்டங்களில் இயற்கை வளங்களின் நிலையான மேலாண்மை (எடுத்துக்காட்டு: BMC-உயிரியல் பன்மை மேலாண்மைக் குழு) குறித்து ஆக்கப்பூர்வமான முடிவெடுக்க அத்தியாவசமானது.

இணைய அடிப்படையிலான இடஞ்சார்ந்த முடிவெடுக்கும் கட்டமைப்பு(WSDSS), இலவச மற்றும் பொதுவாயில் மென்பொருள்களை (GeoServer, PostgreSQL, PostGIS, Leaflet) உள்ளடக்கியும், திறந்த புவிசார் கூட்டமைப்பின்(OGC) அறிவுரைப்படி, தரமான இடஞ்சார்ந்த தகவல்களை ஒருங்கிணைத்தும் உருவாக்கப்பட்டு, பல அளவுகோலில் பகுத்தாய்வு செய்யப்படுகிறது. இணைய வரைபட சேவை(WMS), மற்றும் இணைய அம்சங்கள் சேவை(WFS) போன்றவை சூழலியல், சமூக, பொருளாதார, பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் தகவல்களை திறம்படப் பரப்புவதற்கு உதவுகின்றன.

சுற்றுச்சூழல் உணர்திறன் அல்லது நொறுங்கும்தன்மை என்பது ஒரு இடத்தின் சுற்றுச்சூழல் ஒருமைப்பாட்டில் ஏற்படும் மாற்றங்களால் நடைபெறும் இயற்கையான பரிணாம வளர்ச்சி மற்றும் உயிரினத்தோற்றம் செயல்முறைகளில் குறிப்பிடத்தக்க சேதம் அல்லது நிரந்திர மற்றும் ஈடு செய்ய முடியாத உயிர் வடிவங்களின் இழப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது. ஒரு இடத்தின் சுற்றுச்சூழல் பலவீனம் பற்றிய விரிவான அறிவு, அப்பகுதியைப் பாதுகாப்பதற்கான உத்திகளை உருவாக்குவதற்கு மிகவும் அவசியமானது. இது நிலப்பரப்பு இயக்கவியல் உட்பட சுற்றுச்சூழல் உணர்திறனுக்கு காரணமான காரணிகளை அடையாளம் காணவும், ஒழுங்கற்ற வளர்ச்சி மற்றும் கட்டுபாடற்ற அணுகுமுறைகளின் சிக்கல்களைத் தணிக்க எதிர்கால மாற்றங்களைக் காட்சிப்படுத்துகிறது. கடந்த நூற்றாண்டில் தொழிற்மயமாக்கல், மற்றும் உலகமயமாக்கலுமான திட்டமிடப்படாத வளர்ச்சி நடவடிக்கைகளால், இப்பகுதி பெரிய அளவிளான நிலப்பரப்பு மாற்றங்களைக் கண்டுள்ளது. இடஞ்சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம், பாதிப்புகளை எதிர்க்கொள்ள பங்குதாரர்களை உள்ளடக்கிய தடுப்பு நடவடிக்கைகளை இது அவசியமாக்குகிறது. பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக் கொள்கைகளை வகுப்பது, சமூக-சுற்றுச்சூழல் அமைப்புகள் அதன் தாக்கங்கள் மற்றும் இயக்கிகள் ஆகியவற்றின் இயக்கவியலைக் குறிக்கும் உயிர்-புவி காலநிலை, சுற்றுச்சூழல் மற்றும் சமூக காரணிகளை ஒருங்கிணைத்து, சூழியல் ரீதியாக உணர்திறன் கொண்ட பகுதிகளை வரையறுக்கப் பயன்படுகிறது. தற்காலிக ரிமோட் சென்ஸிங் தரவைப் பயன்படுத்தி, 36 உலகளாவிய பல்லுயிர் பெருக்க மையங்களில் ஒன்றான மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சூழலியல் ரீதியாக உணர்திறன் வாயந்த பகுதிகளின் பகுப்பாய்வு, காடுகளின் நிலை மற்றும் பாதுகாப்பு விருப்பங்கள் குறித்த தீவிர கவலைகளை எடுத்துக்காட்டுகிறது. காடழிப்பு மற்றும் இந்த பழமையான சுற்றுச்சூழல் அமைப்புகளின் தவறான மேலாண்மைப் பற்றி, வன சுற்றுச்சூழல் அமைப்புகளின் தற்போதைய நிலை மூலம் தெளிவாகத் தெரிகிறது. இது தீபகற்ப இந்தியாவில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு கடுமையான சவால்களுடன் நீர் பாதுகாப்பை அச்சுறுத்துகிறது. LU இன் ஸ்பேஷியோடெம்போரல் பகுப்பாய்வின்படி மானுடவியலின் தூண்டப்பட்ட வளர்ச்சி 5% பசுமையான காடுகளை இழக்கச் செய்துள்ளது. மேலும் 4.5% கட்டடப் பரப்பையும் 9% விவசாய பரப்பையும் வளர்ச்சி அடையச் செய்துள்ளது. ஃபிராக்மென்டேஷன் பகுப்பாய்வின்படி, வன நிலப்பரப்பில் 25% மட்டுமே உள்காடுகளைக் கொண்டுள்ளது. இது துண்டு துண்டான அழுத்தத்தை சித்தரிக்கிறது. இது உள்ளூர் சூழியலை பாதிக்கிறது. இ.எஸ்.ஆர்(ESR) வரையறுப்பு, உயிரற்ற மற்றும் சமூக/மானுடவியல் காரணிகளைக் கருதுகிறது. மேலும் இது பலவீனமான நிலப்பரப்பின் தற்போதைய நிலை மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிப்பதில் அவற்றின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது. கட்டம் வாரியான பகுப்பாய்வின்படி,32%(755 கட்டங்கள்) ESR-1 கீழ் அடங்கும். இவை மிக அதிக சுற்றுச்சூழல் பலவீனத்தைக் குறிக்கும் பகுதிகளாகும். 16%(373 கட்டங்கள்) ESR-2 கீழ் அடங்கும். இவை ESR-1 பகுதிகளாக மாறும் சாத்தியம் கொண்டவை. 34%(789) மற்றும் 18%(412) ஆகியவை முறையே ESR-3 மற்றும் ESR-4 கீழ் வருவதுடன் மிதமான மற்றும் குறைந்த சுற்றுச்சூழல் பலவீனத்துடன் இருக்கும் பகுதிகளாகும். ESR பகுப்பாய்வு 63,148(ச.கி.மீ) பரப்பளவை மிக அதிக சுற்றுச்சூழல் பலவீனத்தின் கீழும், 27,646(ச.கி.மீ) பரப்பளவை அதிக சுற்றுச்சூழல் பலவீனத்தின் கீழும், 48,490(ச.கி.மீ) மற்றும் 20,716(ச.கி.மீ) பரப்பளவுகள் மிதமான மற்றும் குறைந்த சுற்றுச்சூழல் பலவீனம் கொண்ட பகுதிகளாகவும் சித்தரிக்கிறது. நிலையான வளர்ச்சிக் கொள்கை கட்டமைப்பில் ESRகளை ஒருங்கிணைப்பது, திட்டமிடப்படாத வளர்ச்சி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கு உதவும். இது மக்களின் வாழ்வாதரத்தை நிலைநிறுத்துவதற்கான அத்தியாவசிய சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளின் தொடர்ச்சியுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிபடுத்த உதவுகிறது. சுற்றுச்சூழல் பலவீனமான மேற்குத் தொடர்ச்சி மலைகளை விவேகமாக நிர்வகிப்பதன் மூலம் அடுத்த தலைமுறைக்கு (தலைமுறைகளுக்கு இடையேயான சமபங்கு) இயற்கை வளங்களை (போதுமான மற்றும் சுத்தமான நீர், காற்று போன்றவை) வழங்குவதை உறுதி செய்வது நம் கைகளில் உள்ளது. நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நமது குழந்தைகழுக்கான முக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதை உறுதி செய்வோம்.

மொழிபெயர் பய அபர்னா விசுவநாதன் & ஆதித்யன் அன்பழகன்
Translated by: Abarna Visvanathan & Adhithyan Anbalagan


Research Team (Data Compilation)

G.R. Rao Field Data Collection
Central Western Ghats
Vishnu D. Mukri
Shrikanth Naik
Misha Fauna Distribution
Sreelekha P.B Angiosperm Tree Species
Haritha N Mapping Biodiversity
Arjun SR Protected Areas
Sincy V Valuation of Ecosystem Services
Asulabha KS
Rajesh Rana Western Ghats Villages Rectification


Developer Team

Abhishek Baghel Appplication Design & Developer


E-mail    |    Sahyadri    |    ENVIS    |    GRASS    |    Energy    |      CES      |      CST      |    CiSTUP    |      IISc      |    E-mail